Friday, November 18, 2011

அழகான தோழி !!!

அவள் அழகானவள் தான் !

இரு கரம் பற்றி
நடக்கையில் ,
தூசி பட்டதென்னவோ
என் கண்களில் தான் -
கண்ணீர் கண்டதென்னவோ
அவள் கண்களில் !

அவள் அழகானவள் தான் !

எத்தனையோ தடுக்கல்களில்
என் வாழ்வில்
நட்பாய் துணை நின்ற -

அவள் அழகானவள் தான் !

நான்கு வருட
பிரிவின் பின்
எத்தனையோ
வலி இருந்தும்
பொய்யாய் நலம் -
என்கையில்

அவள் அழகானவள் தான் !

Friday, May 20, 2011

இந்த(அந்த) நொடி போதுமடி!!! ......

எனைப்பார்த்து திரும்பும்
நேரமெல்லாம் ...
உன் கழுத்தோர
மடிப்பில்...
கரைந்தேனே நான் !

காலம் தள்ளி
காதலை சொல்ல..
வெட்கத்தை மட்டும்
விடையாய் கொடுத்து
ஓடினாயே ?
மாண்டாலும் மறக்காதடி
அந்த நொடி !!

இட்டேறி வழி
பயணத்தில் ...
இடறி நீ
என்மேல விழ ...
வெட்கம் இல்லா
முத்தமிட்டு ...
சுற்றும் முற்றும்
பார்த்த விழி
சொல்லிச்சடி
உன் காதல்!!!

இந்த ஜென்மம்
போதுமடி !
இந்த நொடி
நீளுதடி - என்
வாழ்வில் !!!!

Wednesday, May 18, 2011

காதலிப்போமா காலை வரை !!!!

இரவு வானம்
தனிமையில்!
என்னோடு நீ
மட்டும்!
நிழல் கூட
துணைக்கு வேண்டாம்!
காதலிப்போமா
காலை வரை !!

என் மார்மீது ..
நீ உறங்கி..
நான் உறங்கா..
நீண்ட இரவு ...
கேட்போம்!!!

நட்சத்திர சங்குகள்
பொருக்கி !
நீலவான கரையோரம்
மேக வீடு
கட்டலாம் !!!!

நிலா பெண்ணை
சாட்சிக்கு வைப்போம்
நம் காதலுக்கு !
காதலிப்போமா
காலை வரை !!!!

Tuesday, May 17, 2011

காதலி வரும் நேரம் !!!

உன்னை தேடியே
என் பார்வை
தீர்ந்துவிடும் போல
சீக்கிரம் வந்துவிடேன் !!

நீ அருகில்
இருக்கையில் மட்டும்!
இவ்வுலகம் விடிந்து
இருப்பதேன் ?

நீ வந்து சென்ற
இடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?

இரவெல்லாம் உறங்கியது
போல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?

என்னவோ இருக்கட்டும்
என்னவள் வருவாள்
நேரமாச்சு !!
பேருந்தை நோக்கும்
விழிகள் மட்டும்
ஊமையாக ?

Monday, May 16, 2011

என் வானம் !

அம்மாவாசை இரவாய்
என் வானம் ! - அதில்
முழு நிலவாய்
உன் முகம்
மட்டும் தெரிவது
எப்படி ?

காதல் ரொம்ப தூரமோ ? ....

காற்றில் போட்ட
துளையாக..
காணாமல் போனதே
என் காதல் !...

கருகி விழுந்த
பூவாக ...
மக்கி போனதே
என் காதல் !!....

காதலில் நான்
ஒரு நொண்டி !
எப்படி தொடுவேன்
இமயத்தை !!?

அவளுக்கு பிடிக்கும் .....

என் கவிதை
பிடிக்கும் அவளுக்கு .....

அதில் காதல்
பிடிக்கும் அவளுக்கு .....

என்னை கூட
பிடிக்கும் அவளுக்கு .....

என் காதல்
மட்டும் பிடிக்காது !!!!!

Saturday, May 14, 2011

என் தோழியே மன்னிப்பாயா ? !!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

உன் கோபத்தை
ரசிக்க தெரிந்தவன்
மதிக்க மறந்து
விட்டேன் -மன்னிப்பாயா?

உன் பிரிவால்
அறிந்தேனடி ,
அன்பின் விலையை !!!

பாராத உன்
முகம் !
பதில் இல்லாத
பேச்சு !
தனிமையிலும் கேட்குதடி
உன் சிரிப்பு
சத்தம் !!!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

Thursday, May 5, 2011

சும்மா... கவிதைகள் : வெட்கமா ? - வேண்டாமா ?

நான் உன்னை
கடக்கும் பொழுதெல்லாம்
சாத்திக்கொள்கிறதே - உன்
ஜன்னல் கதவுகள் !!?

நான் உன்னை
பார்க்கும் பொழுதெல்லாம்
சிரிக்கிறாயே !!?
என் பார்வை என்ன
நைட்ரஸ் ஆக்சைடா ?!!

ன்னை கடக்கும்
பொழுது மட்டும்
புதிதாய்,
நடை பழகுதே
உன் கால்கள்
அன்னிச்சையாக ?!!

Tuesday, May 3, 2011

சின்ன சின்ன கவிதைகள் சொல்லி ...

காதலை தான்
தர மறுக்கிறாய்!
கனவையாவது கொடு
நான் இருக்கிறேனா
பார்க்கிறேன் ?!!

காதலை தவிர்த்து
எத்தனையோ பொய்
சொல்லி இருப்பேன்
உன்னிடம் பேச !
தவிர்த்த ஒரே ஒரு
உண்மையை சொல்ல
பயம் !!
பேச மாட்டாயோ
என்று !!?

ன் நினைவுகளின்
நிமிடங்களை கேட்டுப்பார் ,
ஒவ்வொரு வினாடிகளுமே
உன் பெயரையே
சொல்லும் !!!

Friday, April 29, 2011

பஞ்சவர்ண புறா

பதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் ....

ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம்

என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு " பஞ்சவர்ண புறா"

பிழை இருந்தால் மன்னியுங்கள் (திருத்துங்கள்) ...

கதை சொல்லவா ? நண்பர்களே ????!!!!!!!

தீராதடி இந்த காதல் ...

தீராதடி இந்த காதல் ...

என் நினைவுகளின்
சொந்தக்காரியே !
தீராதடி இந்த
காதல் !

இறைவன் என்
வானில் வரைந்த
ஓவியமே !
இன்று வெறும்
காகிதமாக என்
வானம் !

இரு விழி பார்வை
இமை கோபம்
செல்ல சண்டை
செவ்விதல் முத்தம்
இப்படி ஆயிரம்
இம்சைகள் இன்னும்
வேணுமடி எனக்கு !

நேற்று கூட
உன்பெயரில் யாரையோ
அழைத்த - குழந்தையிடம்
என் பார்வை
புன்னகையுடன் !!!

விழியில் விழுந்ததால்
காதலிக்கவில்லை ! - என்
மனதில் பதிந்ததால்
காதலித்தேன் !!
தீராதடி இந்த காதல்.......

Tuesday, April 26, 2011

அக்கா! - தங்கை!!

எங்கள் தேவனே
யாரிடம் முறையிட ?..

அப்பாவை அழைத்தாய் !
அம்மாவையும் அழைத்தாய் !!
எங்களை ஏன்
தவிக்கவிட்டாய்
இவ்வுலகில் !!!

எனக்கு - அவள் !
அவளுக்கு - நான் !
இந்த உறவு போதுமென்று
புறம் தள்ளினாயோ ?

உறவுகள் துறக்கின்றன
மணம்முடிக்க செலவாகுமே ?
யார் கேட்டார்
அன்பை தவிர ?

பெண் பார்க்க வந்தவன்
இடம் பார்கிறான் !
மணம் முடிக்க நினைப்பவன்
பணம் பார்கிறான் !!

மனசு மாவிழை
தோரணம் போல்
வாசலோடு சரியா?

இறைவா ?
உதிரும் கண்ணீரும்
உதிரமாக !
வளமும் வாழ்வும்
தூரமாக !!
எங்களுக்கு மட்டும்
ஏன் ?

Tuesday, April 19, 2011

கடை(சி ) பார்வை வேண்டுமடி!....

அன்பு தங்கமே !,

காலனின் அழைப்பை
எதிர் நோக்கி ,
என் இறுதி
உறக்கத்தை தேடும்
என் விழிகளுக்குள்
உன் நினைவே !!

உன்னை தேடும்
இந்த உயிருக்கு
இனி அவள்
தடை இல்லை !
மனைவியின் மடியில்
மன்னிப்பாய்
என் கண்ணீர் !!

ஆறடியில் அடங்குவேனோ
அக்கினியில் சிதைவேனோ
நான் அறியேன் ?
உன் திருபாதம்
நாடி என்
இறுதி கடிதம் !!!

நாம் பிரிந்து
நாலு பத்து
வருசங்களாச்சு !

வாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !

நீ
தனியாளோ ? - இல்லை
துணையோடோ ?
கேட்க வரம்பில்லை,
ஆனால் மனமில்லை
பாராமல் பிரிய
இறுதியாக ?!!!

உன்
கடை(சி ) பார்வை
வேண்டுமடி!
காட்டுக்கு செல்லும்
முன்!!!

Monday, April 18, 2011

ரகசிய சினேகிதி !!!!!

எங்கு சென்றாயடி
என் உயிரே?
வாரம் கழிந்ததடி
வருடத்தின் வேதனையுடன்!

எட்டடி தொலைவில்
நீ !
ஏனோ உன்னருகில்
நினைவு !!

நீ பார்க்கும்
திசையெல்லாம் ...
என் பார்வையும்
அனிச்சையாக !!!

நீ சென்ற
பின்னும் !
நீ அமர்ந்த
இடம் நோக்கி
நான்- ஒற்றையாக !!!

Thursday, April 14, 2011

நீ இல்லா நாட்களில் !!!!!

நீ இல்லா
நாட்களில் !

நீயும் நானும்
பேசிய
மர நிழல்
துணையாக
உன்னை போல் !!

நீ இல்லா
நாட்களில் !

கனவுகளையும் களைந்து
கண் விழித்து
பார்க்கின்றேன் ! - இரவில்
நீ இருப்பாயா
என்று ?
ஒருமையாக !!

நீ இல்லா
நாட்களில் !

என் காதோரம்
பேசிய கதைகளும் !
இடை இடையே
உன் மூச்சுக்காற்றும் !!
இதமாக இனிக்குதடி
நீ இல்லா
நாட்களில் !!!!!

Tuesday, April 12, 2011

பூங்கா காதலியே !!!

உன் வரவுக்காக
தனிமையில் வாடுவது
நான் மட்டுமல்ல ?
நீ அமரும்
பூங்கா நாற்காலியும் !!!!

உனக்கு தெரியுமா ?
நீ அமர்ந்து சென்றபின்
சருகை கூட
அனுமதிக்க வில்லை
அதில் ...!!!

எத்தனை மலர்கள்
இருந்தும் ஏனோ ?
நீ முகர்ந்த
பூக்களை மட்டும்
எனக்கு பிடிப்பதேன்?

நீ சிதறி
விட்டு போன
ஒரு சோற்றையும்
எடுத்து செல்வதால்
எறும்புகள் கூட
எதிரி ஆகிறதே
என்ன செய்ய ?!!!

நீ சென்றபின்
அந்த இரவு
எனக்கு ஏனோ
அம்மாவாசையாக !!!!!

Wednesday, April 6, 2011

குறுந்தகவல் கடிதங்கள் !!!

அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

எவ்வளவோ கதைகள் ...
சின்ன சின்ன
சிணுங்கல்கள் ...
இடை விடாத
உன் அழைப்புகள்....
இன்றும் சாரல்
போல் நினைவுகளில் ...

எப்படி எடுத்தாய்
உரிமையை
என்னையும் அறியாமல் ...

இரவெல்லாம் நீமட்டும்
தான் பேசுவாய் ...
இறுதியில் காதலை
சொன்னால் மட்டும் ...
மௌனம் ஆக்குகிறாயே
ஒவ்வொரு இரவையும்....

ஒளிவு இல்லை
மறைவும் இல்லை
ஒன்றை தவிர ..!
நட்பை தாண்டி
நாளாச்சுடி..!

காதலை ஏற்க்க
மனம் இல்லையா ?
இல்லை .........
உன் மனதில்
நான் இல்லையா ?

என் கடைசி
கேள்வியும் ...
உன் கடைசி
மௌனமும் ....
காதலால் தான் ?

அன்று வரை
ஒவ்வொரு
இரவின் இறுதி
தான் மௌனமாகும் !!!

இன்றோ
இரவெல்லாம் மௌனமான
ரணமடி !!!!

என் அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

Monday, April 4, 2011

உனக்கு மட்டுமே தெரிந்த மெய் !!!

நான் செய்த
பிழை என்ன ?

1000 சோகம்
என்றாய்?
நான் அறிவேனடி ...................
என்னை விட்டு
எங்கு தொலைத்தாய்
உன் சோகத்தை !!?

நீ உறங்கிய
என் தோள்கள்
கேட்குதடி ??
என்ன சொல்லுவேன் ?
பொய் சொல்லவா ...
அது கனவென்று !!!

நான் ஊட்டிய
உன் உதடுகள்
பொய் சொல்லுதே ?
காதல் வேண்டாம்
நண்பன் என்கிறாய் ?
எங்கு படித்தாய்
இந்த இலக்கணத்தை ??

எனக்கு காட்டிய காதல்
முகம் பிழையா? - இல்லை
உன் கணவனை
என்ன சொல்லி
அழைப்பாய் ?

என்ன செய்ய
மன்னிப்பேன் ?
மன்னிப்பேன் !
மரணம் வரை
மன்னிப்பேனடி !!

"நான் உன்னை காதலித்தேன்"

இது பிழையா ?
இல்லை காதலா?

உனக்கு மட்டுமே
தெரிந்த மெய் !!!

Friday, March 18, 2011

சும்மா ஒரு கவிதை!!!.........சும்மா ஒரு காதல்!!!........

அவள் : முதல் சந்திப்பு .....?

அவன் : அன்று தெரியாது
உன்னை காதலிப்பேன்
என்று...

இன்றும் தெரியாது
என்று சந்தித்தோம்
என்று ....

ஜென்மம் தொட்ட
உறவு நீ !!!

அவள் : என் முகம்....?

அவன் : ஆறடியோ......
ஈரடியோ.........
என் அருகில்
என்றும் பௌர்ணமி !!!

அவள் : பொய் ....?

அவன் : எனக்கு மட்டுமே
சொந்தமான உன்
கோபம் ....!

அவள் : முத்தம் ....?

அவன் : அ ... முதல்
ஔ... வரை

நமக்குள் மட்டும் ....

அவள் : பிரிவு ...?

அவன் : வார்த்தையிலேயே வலி
உள்ளது ...
வார்த்தையாக மட்டும்
இருக்கட்டுமே ....
நம் வாழ்வில்
வேண்டாமடி!!! .....

அவள் : காமம் ....?

அவன் : என் அன்பின்
அடுத்த பரிமாணம் !!!

அவள் : காதல் .....?

அவன் : இன்று வரை
உன் உதடுகள்
பேசாத வார்த்தை ...

என்றும்
உன் இமைகளிலும்
இரு விழிகளிலும்
காண்பது ...!!!

Wednesday, March 9, 2011

பொய்யானது இரவுகள் .....

ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .......

கவிதை சொல்லவா ? -இல்லை
கதை சொல்லவா ?
கதை வேண்டாம்
சில பொய் சொல்லவா?

பொய் !!!!!
உன்னை ஏமாற்ற
நீ சொன்ன காதல் !!!

பொய் !!!!
அழகான ஒரு
உயர்கொல்லி !!!

பொய் வேண்டாம்
ஒரு மெய் சொல்லவா?

இரவின் மடியில்
நீ!
உன் மடியில்
நான் !!
என் மூச்சு காற்றில்
இளைபாரியது உன்
இடை !!!
கேள்வி கேட்க்க வந்த
உன் உதடுகள்
தடுமாறின --- விடிந்ததும்
கேட்கிறேன் என்றது .............................................................
என்னை மன்னிப்பாயாடி ????

விடியும் ஒரு நாள்
அன்று சொல்கிறேன் உண்மையை (மீதியை)

Friday, March 4, 2011

முதல் ராத்திரி!!!

கனவொன்று கண்டேனடி !
உனக்கும் எனக்கும்
முதராத்திரி!!

கவிதை வரும்
மாலை பொழுதில் ....

அந்தி பகலவன்
ஓடி மறைந்தான் !
காதல் நிலா
வெட்கப்படுவாள் என்றோ ?!!

இல்லை என்னுடன்
காதல் பேச நீ
வருவாய் என்றோ ?!!!

நாளை வருவான்
கேட்டு வைக்கிறேன் !

ஒற்றை நிலா
உச்சிவரை சென்றுவிட்டாள்!
வானை நோக்கிய
என் விழிகள் !!!

யாரோ அழைக்கிறார்கள்
இடை மறித்து சொன்னது
என் மனது !

திரும்பிய விநாடி
திகைத்து போனேன்
வந்தது நீ தான் !!!

என் விழியோடு
புது மொழி பேசியது
உன் விழிகள் !!!

காதலை கூட
சொன்னாய் - சில
கவிதை கூட
பேசினாய் - ஒரு
பொய் கோபம் கூட
கொண்டாய் ..

எதிரியாய் நேரம்
கரைகிறதே !
ஏனோ - நான்
பேச வார்த்தை தெரியாத
குழந்தையாய் நின்றேன் !!!

எப்படி பேசுவேன்
நேற்று மணமேடையில் நீ !
மணமகன் யாரோ ?!!
கனவை கலைத்தது
கண்ணீர் !!!

கனவொன்று கண்டேனடி !
உனக்கும் எனக்கும்
முதராத்திரி!!!!??

Thursday, February 3, 2011

அறுபதிலும் ஆசை வரும்........

அறுபதிலும் ஆசை வரும்........

முத்தமிட பாக்கி
இல்லை உன்னிடத்தில்..........

தொட்ட சுகம்
கண்டதில்லை வேறிடத்தில் .........

நம் உறவுக்கும்
உயிர் பிறந்தாச்சு
உன்னை கிளவியாக்க ........

நாடி நரம்பு
அடங்கியாச்சு...
நரை போட்டு
வருசங்க போச்சு ......

"அருபதுல ஆசைய பாரு"
நேத்து கூட
ராவுல சொன்ன ....

இது
ஆசை இல்லைடி
என்
அச்சு வெள்ளம் !!!
அவ்வளவும் காதலடி ?!!!

சொல்லி விளக்க
புதுசா தமிழ் படிப்போமா ?????!!!!!!!!!!!!

Tuesday, January 11, 2011

அடுத்த முதல்வர் யார் ? ஏன் ?

வணக்கம் நண்பர்களே

இது வரை இதுநாள் வரை கவிதைனு ஏதோ எழுதினேன் இனிமேல் கொஞ்சம் மற்றதையும் எழுதலாம்னு யோசிக்குறேன் . முதல் பதிவு என்ன போடலாம்னு யோசிச்சேன் தமிழ் பதிவு தமிழர்களுக்காகவே இருக்கட்டுமே !!

சரி உங்களையே கேக்குறேன்

அடுத்த முதல்வர் யார் ? ஏன் ?

Friday, January 7, 2011

குழந்தையின் கிறுக்கல்கள் !!!

முட்டாளாக முட்டாமல்
சுகமாகவே வந்தேன்
அன்னையே உன்
மூச்சிரைப்பிலும் முக்களிலும்
தண்ணீர்குடம் தாண்டி
தாய்மடி தாண்டி
வந்தேன் உன்னைக்காண !!!!

எத்தனையோ கஷ்டங்கள்
எவ்வளவு வலிகள் தான்
என்னால் உனக்கு

மன்னிப்பு கேட்க
மொழி தெரியாது
என் மொழியில்
கேட்டேன் - என்
முதல் அழுகை

எனக்கான ஒரே
வானம் ..
எனக்கான ஒரே
உலகம் ..
உன் வயிறு!!
இன்னொரு முறை
உன் அன்பில்
உள் இருக்க ஆசை தான்
போதும் இந்த ஜென்மம்
அடுத்த ஜென்மத்திலும்
அனுமதி கொடு !!!

Thursday, January 6, 2011

போய்வாரேன் தாய் வீடே .....

கல்யாணமும் ஆய்டுச்சு
கணவனோட போகபோறேன் !
பெற்ற கண்கள் வலி அனுப்ப
புது வீடு போகபோறேன் !

நேற்று கண்ட கனவெல்லாம்
நிஜமாகும் நேரம் வர !
புது கனவு காண
புகுந்த வீடு போகபோறேன் !!

இருந்தாலும் ஒரு
ஏக்கம் !?

எப்படி நான்
இருக்கபோறேன் ?!!

மஞ்சபூசி அழகு
பார்த்த ...
என் அம்மாவை தனியா விட்டு?!

" பொழுது சாயும்
நேரமாச்சு ...
புள்ள எங்கடி
இன்னும் காணோம் ?.....

சத்த தூரம்
போய் பாரு
புள்ள கிள்ள
வர்றாளானு...... "

ஆளுமையோடு அன்பை காட்டும்
அப்பாவை விட்டு ...!!?

நேத்து வரை
சண்டைகோழி ...
இன்று ஏனோ
தெரியலடா ....?

" சாஞ்சி அழனும்
தோளைக்கோடு .... "
தோழனான அண்ணனை விட்டு ....?!!

எப்போதும் போகாது
செத்தாலும் உன் நினைவு .....
போய்வரேன் என் வீடே ...............!!!

Wednesday, January 5, 2011

விதியோடு போராடும் மௌனங்கள்!!!

நான்கு கண்களும்
நலம் விசாரிக்கையில்
ஏதோ என்றது
நம் கண்ணீர் !!!

பட்டாம் பூச்சியாய்
கோர்த்து திரிந்த
உன் கைகளில் !
இன்று உன்னைப்போல்
இன்னொரு குழந்தை !!!

எத்தனை மன்னிப்புகள்
எத்தனை வாழ்த்துக்கள்
எத்தனை விசாரிப்புகள்
அத்தனையும் ஒரு நிமிட
விவாதத்துடன் !!!

மனம்விட்டு உதிர்ந்த
சிரிப்புகள் - இறுதியில்
கனத்ததடி மனது
எதிர்பார்ப்புகளற்ற
என் தோழி
மீண்டும்
" என்று சந்திப்போம்? " - என்கையில்
தீராத உன் நினைவுகளுடன்

Tuesday, January 4, 2011

நித்தம் வேண்டுமடி உன் முத்தம் !!!

நித்தம் நித்தம்
முத்தம் கேட்கிறேன் !

நீ தர மாட்டாய்
என்று தெரிந்தும் !

தினமும் உன்
புகைப்படத்திடம்!!