Friday, April 29, 2011

பஞ்சவர்ண புறா

பதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் ....

ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம்

என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு " பஞ்சவர்ண புறா"

பிழை இருந்தால் மன்னியுங்கள் (திருத்துங்கள்) ...

கதை சொல்லவா ? நண்பர்களே ????!!!!!!!

தீராதடி இந்த காதல் ...

தீராதடி இந்த காதல் ...

என் நினைவுகளின்
சொந்தக்காரியே !
தீராதடி இந்த
காதல் !

இறைவன் என்
வானில் வரைந்த
ஓவியமே !
இன்று வெறும்
காகிதமாக என்
வானம் !

இரு விழி பார்வை
இமை கோபம்
செல்ல சண்டை
செவ்விதல் முத்தம்
இப்படி ஆயிரம்
இம்சைகள் இன்னும்
வேணுமடி எனக்கு !

நேற்று கூட
உன்பெயரில் யாரையோ
அழைத்த - குழந்தையிடம்
என் பார்வை
புன்னகையுடன் !!!

விழியில் விழுந்ததால்
காதலிக்கவில்லை ! - என்
மனதில் பதிந்ததால்
காதலித்தேன் !!
தீராதடி இந்த காதல்.......

Tuesday, April 26, 2011

அக்கா! - தங்கை!!

எங்கள் தேவனே
யாரிடம் முறையிட ?..

அப்பாவை அழைத்தாய் !
அம்மாவையும் அழைத்தாய் !!
எங்களை ஏன்
தவிக்கவிட்டாய்
இவ்வுலகில் !!!

எனக்கு - அவள் !
அவளுக்கு - நான் !
இந்த உறவு போதுமென்று
புறம் தள்ளினாயோ ?

உறவுகள் துறக்கின்றன
மணம்முடிக்க செலவாகுமே ?
யார் கேட்டார்
அன்பை தவிர ?

பெண் பார்க்க வந்தவன்
இடம் பார்கிறான் !
மணம் முடிக்க நினைப்பவன்
பணம் பார்கிறான் !!

மனசு மாவிழை
தோரணம் போல்
வாசலோடு சரியா?

இறைவா ?
உதிரும் கண்ணீரும்
உதிரமாக !
வளமும் வாழ்வும்
தூரமாக !!
எங்களுக்கு மட்டும்
ஏன் ?

Tuesday, April 19, 2011

கடை(சி ) பார்வை வேண்டுமடி!....

அன்பு தங்கமே !,

காலனின் அழைப்பை
எதிர் நோக்கி ,
என் இறுதி
உறக்கத்தை தேடும்
என் விழிகளுக்குள்
உன் நினைவே !!

உன்னை தேடும்
இந்த உயிருக்கு
இனி அவள்
தடை இல்லை !
மனைவியின் மடியில்
மன்னிப்பாய்
என் கண்ணீர் !!

ஆறடியில் அடங்குவேனோ
அக்கினியில் சிதைவேனோ
நான் அறியேன் ?
உன் திருபாதம்
நாடி என்
இறுதி கடிதம் !!!

நாம் பிரிந்து
நாலு பத்து
வருசங்களாச்சு !

வாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !

நீ
தனியாளோ ? - இல்லை
துணையோடோ ?
கேட்க வரம்பில்லை,
ஆனால் மனமில்லை
பாராமல் பிரிய
இறுதியாக ?!!!

உன்
கடை(சி ) பார்வை
வேண்டுமடி!
காட்டுக்கு செல்லும்
முன்!!!

Monday, April 18, 2011

ரகசிய சினேகிதி !!!!!

எங்கு சென்றாயடி
என் உயிரே?
வாரம் கழிந்ததடி
வருடத்தின் வேதனையுடன்!

எட்டடி தொலைவில்
நீ !
ஏனோ உன்னருகில்
நினைவு !!

நீ பார்க்கும்
திசையெல்லாம் ...
என் பார்வையும்
அனிச்சையாக !!!

நீ சென்ற
பின்னும் !
நீ அமர்ந்த
இடம் நோக்கி
நான்- ஒற்றையாக !!!

Thursday, April 14, 2011

நீ இல்லா நாட்களில் !!!!!

நீ இல்லா
நாட்களில் !

நீயும் நானும்
பேசிய
மர நிழல்
துணையாக
உன்னை போல் !!

நீ இல்லா
நாட்களில் !

கனவுகளையும் களைந்து
கண் விழித்து
பார்க்கின்றேன் ! - இரவில்
நீ இருப்பாயா
என்று ?
ஒருமையாக !!

நீ இல்லா
நாட்களில் !

என் காதோரம்
பேசிய கதைகளும் !
இடை இடையே
உன் மூச்சுக்காற்றும் !!
இதமாக இனிக்குதடி
நீ இல்லா
நாட்களில் !!!!!

Tuesday, April 12, 2011

பூங்கா காதலியே !!!

உன் வரவுக்காக
தனிமையில் வாடுவது
நான் மட்டுமல்ல ?
நீ அமரும்
பூங்கா நாற்காலியும் !!!!

உனக்கு தெரியுமா ?
நீ அமர்ந்து சென்றபின்
சருகை கூட
அனுமதிக்க வில்லை
அதில் ...!!!

எத்தனை மலர்கள்
இருந்தும் ஏனோ ?
நீ முகர்ந்த
பூக்களை மட்டும்
எனக்கு பிடிப்பதேன்?

நீ சிதறி
விட்டு போன
ஒரு சோற்றையும்
எடுத்து செல்வதால்
எறும்புகள் கூட
எதிரி ஆகிறதே
என்ன செய்ய ?!!!

நீ சென்றபின்
அந்த இரவு
எனக்கு ஏனோ
அம்மாவாசையாக !!!!!

Wednesday, April 6, 2011

குறுந்தகவல் கடிதங்கள் !!!

அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

எவ்வளவோ கதைகள் ...
சின்ன சின்ன
சிணுங்கல்கள் ...
இடை விடாத
உன் அழைப்புகள்....
இன்றும் சாரல்
போல் நினைவுகளில் ...

எப்படி எடுத்தாய்
உரிமையை
என்னையும் அறியாமல் ...

இரவெல்லாம் நீமட்டும்
தான் பேசுவாய் ...
இறுதியில் காதலை
சொன்னால் மட்டும் ...
மௌனம் ஆக்குகிறாயே
ஒவ்வொரு இரவையும்....

ஒளிவு இல்லை
மறைவும் இல்லை
ஒன்றை தவிர ..!
நட்பை தாண்டி
நாளாச்சுடி..!

காதலை ஏற்க்க
மனம் இல்லையா ?
இல்லை .........
உன் மனதில்
நான் இல்லையா ?

என் கடைசி
கேள்வியும் ...
உன் கடைசி
மௌனமும் ....
காதலால் தான் ?

அன்று வரை
ஒவ்வொரு
இரவின் இறுதி
தான் மௌனமாகும் !!!

இன்றோ
இரவெல்லாம் மௌனமான
ரணமடி !!!!

என் அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

Monday, April 4, 2011

உனக்கு மட்டுமே தெரிந்த மெய் !!!

நான் செய்த
பிழை என்ன ?

1000 சோகம்
என்றாய்?
நான் அறிவேனடி ...................
என்னை விட்டு
எங்கு தொலைத்தாய்
உன் சோகத்தை !!?

நீ உறங்கிய
என் தோள்கள்
கேட்குதடி ??
என்ன சொல்லுவேன் ?
பொய் சொல்லவா ...
அது கனவென்று !!!

நான் ஊட்டிய
உன் உதடுகள்
பொய் சொல்லுதே ?
காதல் வேண்டாம்
நண்பன் என்கிறாய் ?
எங்கு படித்தாய்
இந்த இலக்கணத்தை ??

எனக்கு காட்டிய காதல்
முகம் பிழையா? - இல்லை
உன் கணவனை
என்ன சொல்லி
அழைப்பாய் ?

என்ன செய்ய
மன்னிப்பேன் ?
மன்னிப்பேன் !
மரணம் வரை
மன்னிப்பேனடி !!

"நான் உன்னை காதலித்தேன்"

இது பிழையா ?
இல்லை காதலா?

உனக்கு மட்டுமே
தெரிந்த மெய் !!!