Friday, December 31, 2010

யார் பைத்தியம் ??

நேற்று செத்தவன்
எழுதிய கடிதத்தில்

காதலில் முடிவு
மரணமாம் !!! - பைத்தியம்


நேற்று இரவு கூட
ஒரு கவிதை படித்தேன்

காதலின் தொடக்கம்
கண்களாம் !!! - பைத்தியம்

கண்கள் பேசுவது
பொய்!!
வார்த்தைகளில் வருவது
வயது!!
நாளைய வாழ்க்கை
கேள்விகுறி !! - காதல் பைத்தியம் !!?

Thursday, December 30, 2010

" அம்மா எழுப்பினாங்க அப்பா கூப்பிடாங்கனு "

ஊமையான இரவுகளில் !

தொலைத்த புத்தகத்தில்
இரண்டு பக்கங்களை
தேடும் கண்கள் ...

ஒவ்வொரு வரிகளும் - பொய்யாக !!

ஆம் பொய்யாக
உண்மையை தேடும்
காணல் நீர்...............

இன்றும் விடிந்தது

என் இரவு - பொய் சொல்லி !!!!??

" அம்மா எழுப்பினாங்க
அப்பா கூப்பிடுறாங்கன்னு "

Monday, December 13, 2010

நரிகள் பேசுது ???!!!

சத்தியமே !!!

நரிகள் உண்மை பேசும்
உண்மையான நாடு!

பசுக்கள் முட்டினால்
உண்மைதான்

பீ திங்குமா ?

ஏற்றதுடன் தங்கம் விலை
இறங்கு முகமாக அன்பின் விலை

எடுத்து சொல்ல
அறிவாளி இல்லை !!

ஏதோ ஆதங்கம்

Saturday, December 11, 2010

மறுபடியும் சும்மா ஒரு கவிதை!!!

மறுபடியும் சும்மா ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன் நண்பர்களே !! திட்டாதிங்க கதைய கேளுங்க

ஆம் அது இரவுதான்

நான் மறுத்தாலும்
அது இரவே தான்

ஹ்ம்ம்

நான் தூங்கவா ?
வேண்டாம் என்றது
உன் வெக்கம் ...

ஹ்ம்ம்

நான் தூங்கல
வேண்டாம் என்றது
உன் பாசம்...

ஹ்ம்ம்

என்ன பன்னட்டும்
வெக்கம் இல்லை
பரவால
ஒரு முத்தம்
கொடேன்
கனவிலாவது தூங்குறேன் !!!


கனவு தான் கனவே தான்
ஏக்கத்துடன்!!!!

சும்மா!!! சும்மா!!!!!

Friday, October 8, 2010

என் ஆண்மையை இழுக்காக்காதே !!!

இரவுகளை கூட
ஏமாற்றி விடுவேன் !
உன் நினைவுகளை!?

பகலில் கூட
உன் முகம்
என் இமை ஓரம்
கசியுதடி கண்ணீராக !!

தடுத்தாலும்
தறி கெட்ட கண்ணீர்
என் ஆண்மையை
இழுக்காக்குதே !!!

உனக்கு மட்டுமே
தெரியும் அதற்கு விடை !!
ஆனால் வினா
இல்லையடி !!!

முடிந்தால் கடைசியாக
கொன்றுவிடேன்!!!!!

உன் காதல் கோமாளி ...!!!

உன் பார்வை

என்னை ஏமாற்ற
நீ வெட்கப்பட்டு
உன் பாதம்
பார்த்தது .....!

உன் புன்னகை

என்னை ஏமாற்ற
எனக்காக நீ
ஒழித்து வைக்கும்
ஓவியம் .....!

உன் காதல்

இன்னும் கிடைக்காததால்
நான் இன்னும்
ஏமாறவில்லை ...!!

ஒரு நாள்
ஏமாறலாம்
எதிர் பார்ப்புடன்
உன் காதல் கோமாளி ...!!!

Wednesday, October 6, 2010

உன் புன்னகையை தேடி ஒரு உயிர் !!

அந்த மாளையில்

உன் புன்னகைக்காக
ஏங்கிய நொடிகள்
என்னைவிட
உனக்காக நான்
காத்திருந்த நாற்காலிகள்
அறியும் !! - உனக்கு ??

உன் உறவுகள்
உன்னை அழைத்தாலும்
எனக்காக நீ
காத்திருந்த கணங்கள்
நண்பனாக தோற்றேனடி
உன் அன்பில் - காதலை தேடி !!!

இப்படி எத்தனை
தினங்கள் !!!

இன்றும் உன் புன்னகையை
தேடி ஒரு உயிர் !!!

காதலிக்கிறாயா என்னை ?

தடை இல்லா மின்சாரம்
அந்த பார்வை !

துளை இல்லாமல்
துளைத்தடி என்
இதயத்தை !!

நிலவும் நேற்று
ஓடி மறைந்ததடி !

ஒவ்வொரு கனவிலும்
என் இரவுகளை
எதிர் கொள்ளும்
உன் வெட்கத்தில் !!

பாவம் என்
மனதடி !

இன்றாவது பதில் சொல்
கனவுகள் களையும் முன்!!!

காதலிக்கிறாயா என்னை ?

Tuesday, October 5, 2010

உனக்காக சாகலாம் ..............அட இதும் சும்மா ஒரு கவிதைங்க

திருடி

நீ களவாடியது
இதயம் மட்டுமல்ல
என் இரவுகளையும் தான் ....

நெறைய பேசணும்
நெறைய திட்டனும்
ஏதோ
அந்த வார்த்தைகள்
உனக்கு வக்காலத்து
வாங்குதே !!!

கவிதைகளில் மட்டுமே
உன்னை
முத்தமிட்டேன் ........
கவிதைகளில்
மட்டும் தானடி
தொட்டு இருப்பேன் ...............

ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?

பரவால தங்கம்

நீ தான

இப்படி கோடி முறை தோற்பேன்
உனக்காக ?

Sunday, October 3, 2010

சும்மா ஒரு கவிதை

ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?

ஒரு நிமிஷம்

உன் முத்தம் ............ அது எனக்கா ?

இரவு என் அருகில்
உன் கனவு
அதனருகில்

ஒரு நிமிஷம்

உன் வெட்கம் ........... அது எனக்கா ?

கனவும் பொய் சொல்லுதே
பத்து விரல்களுக்குள்
தொலைந்த வினாடியை

ஒரு நிமிஷம்

ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?


ஒரு பொய் - உன்னை காதலித்தேன்
1000 பொய் - உன்னை மட்டுமே காதலித்தேன்

Friday, September 24, 2010

அவள் வெட்கத்தில்.........

ஒரு கனவு இரவில்

உன் இதழ்கள் இரண்டு
காதோரம் பொய் சொன்னது
இன்னைக்கு மட்டும் வேண்டாம்

என் இதழ்களுக்கு
தமிழ் தெரியாதே !

தயவு செய்து வேண்டாம்
இன்றும் தோற்றது
உன் இடை

மன்னித்து விடு
என் கைகளை !!

இன்னும் ................( கனவு கலைந்தது )

ச்சே ஒரு நிமிஷம்
அவ வெக்கத்த .................

எட்ட முடியாத உயரத்தில்

சாப்டியா
கேட்க கூட உரிமை இல்லை

நீ நல்லா இருக்கியா
இதுக்கும் உரிமை இல்லை

என்ன (டி) பன்னட்டும்
உன்னை போய்
என் சாம்பலும்
உன் சுவாசம் எட்டாது

ரொம்ப ஆசையாய்

காதல் இல்லை
நீ மட்டும்

நீ தூக்கி எறிந்தால்
உடையும் கண்ணாடி (டி)

Monday, September 13, 2010

பூ, செருப்பு, காதல் - ஒரு ஒற்றுமை

என்னவள் தலையில்
இருந்து எறியப்பட்ட
பூ !

என்னவள் காலில்
இருந்து விலக்கப்பட்ட
செருப்பு !

என்னவள் மனதில்
இருந்து எடுக்கப்பட்ட
என் காதல் !!

இவை மூன்றிலும்
என்ன வேற்றுமை
காண !!!

Thursday, September 9, 2010

காலம் சொன்ன பதிலும் நீதானடி

காலம் பதில் சொல்லும்
என்றாய் ?

இன்றும் உன்
நினைவுச்சிறைக்குள்
நிமிடங்களை தொலைக்கும்
கைதி நான் ...!

என் ரணமான
இரவுகள் !
என் காதலின்
அருஞ்சொற்பொருள் ...!

இன்றும் நான்
ரசிக்கும் சில
பாடல் வரிகளுக்குள்
நீ ....!

என் கனவுகளும்
பொய் சொல்லவில்லை !

எப்படி சொல்வாய்
பிரிந்துவிடலாம்
என்று...?!

எனக்கு
காலம் சொன்ன
பதிலும் நீதானடி.....!

Wednesday, September 8, 2010

தெருவோரத்து ....குப்பை

எவரையும் நினைப்பதில்லை !!

என்னை மட்டும்

நினைகின்றாயே - வெறுத்துக்கொண்டே !!

ஏன் ?

..............................................................................

மரிக்கும் வேளையில்
மடியில் சேர்த்து
முத்தமிட்டால் -

எமனும் என்
நண்பனே !!

................................................................................


தெருவோரத்து ....
குப்பையாய் போய்விட்டது
என் காதல் !

ஆம்,

அந்த குப்பையும்
ஒரு காலத்தில்
தெருவில் இருந்திருக்காது !!

Thursday, September 2, 2010

என்னோடு இருந்து விடு - உனக்காக மட்டுமே நான்

என்னோடு இருந்து விடு
இன்னும் ஒரு
நூறு ஆண்டு காலம்
வாழலாமே !!

என்னோடு இருந்து விடு
இன்னொரு உலகத்தை
உன் காலடியில்
வைக்கிறேன்!!
அதில் நடை பழகிக்கொள்
ஒரு குழந்தையாக !!

என்னோடு இருந்து விடு
இரவில் என் கை
உனக்கு தலையணையாக!
பகலில் என் கை
உனக்கு தலைவனாக
என்றும் இருக்கும்
உனக்கு நண்பன் போல !!

என்னோடு இருந்து விடு
எத்தனையோ ஆசைகள்
எத்தனையோ கனவுகள்
உனக்காக மட்டுமே
என்னோடு இருந்து விடு!!!

Wednesday, September 1, 2010

வெட்கமின்றி முத்தம் கேட்டேன்

விளையாட்டாக உன்
காதலை கேட்டேன்....
வெட்கத்தோடு சரி
என்றாய் !

வெட்கமின்றி முத்தம்
கேட்டேன்...
விளையாட்டாக சரி
என்றாய் !

எப்பொழுது வாழ்க்கை
என்றேன் ...
என்ன வேடிக்கை
என்கிறாயே !!

Thursday, August 26, 2010

இன்று வரை நீ தான்

ஒவ்வொரு முறை
கண்மூடினாலும்
உன்னவள் யார் ?
என்கிறது
உன் முகம் !

எப்படி சொல்லுவேன்
அது நீ தான்
என்று
உனக்கு தான்
மணமாகிவிட்டதே!!

Sunday, August 22, 2010

உயிர் வலி

நான்

மரித்துப்போனேனோ - இல்லை
மக்கிப்போனேனோ !
உயிர் பிழைக்க
உடன் வர
மாட்டாயா?

எத்தனை அழுத்தங்கள்
எனக்குத்தான்!
சுமை தாங்கிகுள்ளும்
சொர்க்கம் இருப்பது
உனக்கு கூடவா
தெரியவில்லை ?

எனக்காக இந்த
உலகே உன்னை
தூற்றினாலும் !
இன்னும் என்
பொறுமை இழக்கவில்லை !

ஏமாற்றத்திலும் எதிர்பார்க்கிறேன்
எப்படியாவது என்னை
எழுப்புவாய் !!! - என்றது
பருவ மழையை
பார்த்து வாழும்
விவசாயி விதைத்த
விதை - மண்ணுக்குள்..................

Friday, August 20, 2010

எங்கே சென்றாய் !!

நெஞ்சோடு உன்னை
அனைத்து !!

நெற்றி மீது
முத்தமிட்டு !!

அன்போடு உன்னை
அனைக்கையில் -

என் மார்மீது
உதைத்துவிட்டு
எழுந்தோடிச்சென்றாயே!!!

என் வீட்டு
ஆட்டுக்குட்டியே !!!

Tuesday, May 4, 2010

முத்தம்

உன் இதழ் மடிப்பு கோடுகள்
தடை போட்டது -
என் முத்தத்திற்கு !!

சொல்ல முடியாத காதல் - காலம் தாழ்த்தி விட்டேன்

கண் மூடினால்
உன் முகம்
" உன்னவள் யார்? "
என்கிறது ....
எப்படி சொல்வேன்
நீ என்று....
உனக்கு தான்
மணமாகிவிட்டதே!!!

Sunday, April 11, 2010

ஒரு நாள் இரவில் நான் கண்ட கனவில் அவள் ....

ஒரு நாள் இரவில்
நான் கண்ட கனவில் அவள் ....

அதி காலையிலே
அந்த கதிரவன் கண் விழிக்கையிலே
ஒரு நிலவொளி வீசுதங்கே !..

அந்த வேளையிலே
பூவிதழ் மீதினிலே
பனி துளி வெடிகையிலே
பூக்கள் எல்லாம் பயந்ததங்கே!...

அந்த -
வஞ்சி கொடி இடையாள்
பிஞ்சு மனதுடையாள்
இருபது வயதுடையாள்
என் மனதை கிள்ளிசென்றாள்

அவள் -
நிலவில் செதுக்கிய சிலையோ - இல்லை
என் நினைவை கெடுத்த கிளியோ !!

கண்ணால் ஒரு வலை விரித்தாள்
கன்னி அவள் ஒரு கள்ளி !
காதல் வலையில் தவிக்க விட்டு
களவாடி சென்றால் என் இதயத்தை !!

இறுதிவரை -
அவளும் சொல்ல வில்லை
நானும் சொல்லவில்லை !!

என் உயிர் உள்ளதென்றால்
ஏமாற்றம் எனக்கில்லை!!
ஏமாற்றம் உள்ளதென்றால்
என் உயிர் எனக்கில்லை !!!

இரவு தொடர்கிறது ..........

Monday, March 8, 2010

காதல் கண்டேனடி!

உன் இரு விழிகளுக்குள்
காதல் கண்டேனடி!
ஒவ்வொரு முறையும்
பிரியும் வேளையில்!

பிரிவு

உன் இதழ்கள்
இரண்டும்
போ... என்கயில் ,
உன் இமைகள்
இரண்டும்
நில்... என்கிறது
கண்ணீரை.

Friday, February 19, 2010

என் துடிப்பே .....

விட்டு விட்டு துடிக்குதடி
என் இதயம் ! - இடையில்
என்ன செய்கிறாய் நீ
என் இதயத்தில் !!