Thursday, September 2, 2010

என்னோடு இருந்து விடு - உனக்காக மட்டுமே நான்

என்னோடு இருந்து விடு
இன்னும் ஒரு
நூறு ஆண்டு காலம்
வாழலாமே !!

என்னோடு இருந்து விடு
இன்னொரு உலகத்தை
உன் காலடியில்
வைக்கிறேன்!!
அதில் நடை பழகிக்கொள்
ஒரு குழந்தையாக !!

என்னோடு இருந்து விடு
இரவில் என் கை
உனக்கு தலையணையாக!
பகலில் என் கை
உனக்கு தலைவனாக
என்றும் இருக்கும்
உனக்கு நண்பன் போல !!

என்னோடு இருந்து விடு
எத்தனையோ ஆசைகள்
எத்தனையோ கனவுகள்
உனக்காக மட்டுமே
என்னோடு இருந்து விடு!!!

4 comments:

  1. @ வெறும்பய

    நன்றிங்க

    ReplyDelete
  2. வலிகள் வலிக்க செய்யும் வரிகள்
    என்னோடு இருந்து விடு
    நீ என்னோடு இருந்து விடு

    ReplyDelete
  3. @உமாபதி

    வரிகளை ரசித்ததற்கு நன்றி

    ReplyDelete